பீட்ரூட் மஞ்சள் வைரஸ்: வைரஸ் 
              அறிகுறிகள்: 
           
            
              - அசுவினியின்  மூலம் இந்த நோய் பரவும்.
 
              - இளம்  இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள் ஆரம்ப நிலையில் தோன்றும்.
 
              - நோயின்  தாக்கம் அதிகமாகும் போது, இலைகளில் ஒழுங்கற்ற மஞ்சள் நிற திட்டுக்கள் பச்சை நிற இலைகளுடன்  சேர்ந்து காணப்படும்.
 
              - வயதான  இலைகள் பசுஞ்சோகையுடன், தடித்து, உடையும் நிலையில் காணப்படும். இலைப் பரப்பு சிவப்பு  அல்லது மஞ்சள் நிறமாக தோன்றும். பின் இறந்துவிடும்.
 
             
            கட்டுப்பாடு: 
                - பாதிக்கப்பட்ட  செடிகள் மற்றும் இலைகளை அகற்ற வேண்டும்.
 
                - மீத்தைல்  ஆக்ஸிடெமட்டான் 25.இ.சி (2மிலி/லிட்டர் நீர்) தெளிப்பதால் அசுவினிகளின் நடமாட்டத்தை  கட்டுப்படுத்தலாம்.
 
              | 
             
               
             
              
              
                  | 
               
              
                | அறிகுறிகள் | 
               
              |